Friday, July 11, 2014

சதுரகிரி எங்கே இருக்கிறது?


















ஸ்ரீவில்லிபுத்தூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில், ஸ்ரீவில்லிபுத்துரிலிருந்து சுமார் 8  கி.மீ. தொலைவில் வரும் சிற்றூர் கிருஷ்ணன்கோவில். இங்கிருந்து இடப்பக்கம் பிரியும் சாலையில் சுமார் 15  கி.மீ. தொலைவு பயணித்தால், வத்திராயிருப்பு (வத்ராப்) வரும். அங்கிருந்து இன்னும் 7  கி.மீ பயணித்தால் தாணிப்பாறை என்ற மலைவாழ் மக்களினின் கிராமத்தை அடையலாம். இதுதான் சதுரகிரியின் அடிவாரம். இங்கிருந்து சுமார் 10  கி.மீ தொலைவு மலைப்பாதையில் நடந்து சென்றால் சதுரகிரியை அடையலாம்.

மதுரையில் இருந்து திருமங்கலம்,  டி. கல்லுப்பட்டி, கிருஷ்ணன்கோவில், வத்திராயிருப்பு வழியாகவும் தாணிப்பாறையை அடையலாம். இப்படி வந்தால் சுமார் 77 கி.மீ தூரம். விருதுநகரிலிருந்து தாணிப்பாறைக்கு சுமார் 33  கி.மீ. தொலைவு. சதுரகிரிக்கு செல்ல வேறு இரண்டு வழிகளுண்டு. ஆனால் பெரும்பாலோனோர் வருவது தாணிப்பாறை வழியேதான். இந்த வழிதான் மிகவும் பாதுகாப்பானது, எப்போதும் மக்கள் சென்று கொண்டிருப்பார்கள். 

சென்னையிலிருந்து செல்பவர்கள் "முத்துநகர் எக்ஸ்பிரஸ்" பிடித்து நேராக சென்னையிலிருந்து விருதுநகர் இறங்கி அங்கிருந்து தாணிப்பாறைக்கு பஸ் பிடித்து செல்லலாம். அல்லது "பொதிகை எக்ஸ்பிரஸ்" மூலம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இறங்கி அங்கிருந்தும் தாணிப்பாறை செல்லலாம். அது தான் சதுரகிரி மலையின் அடிவாரம். அங்கிருந்து மலை மேலே ஏறுவதற்கு மூன்றரை முதல் நான்கு மணி நேரம் வரை பிடிக்கும். முதன் முறை செல்பவர்களுக்கு ஐந்து முதல் ஏழு மணி நேரம் வரை ஆகலாம்!

0 comments:

Post a Comment